4000 பேருக்கு பாஸ்… அதிரவைக்கும் மாஸ்… அலைகள் ஓய்வதில்லை புகழ் ராதாவின் மறுபக்கம்… அப்படி என்ன பிசினஸ் செய்கிறார் தெரியுமா..?

நடிகை ராதாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக அறிமுகமானவர் ராதா. அழகு பிளச் திறமையால் தமிழ் ரசிகர்களை தன் அல்டிமேட் லுக்கால் கட்டிப்போட்டவர்.

ராதா சினிமாவின் மிக உச்சத்தைத் தொட்டாலும் கூட அவர் திரைத்துறையை விட்டு விலகியே இருக்கிறார். அதேநேரம் அவரது மகள் நடிக்க வந்துவிட்டார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் கோலோச்சிய ராதா, இப்போதெல்லாம் மிக நெருங்கிய நண்பர்கள் அழைப்பால் அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக தலைகாட்டுகிறார்.

சமீபத்தில் அவர் ஒரு ஊடகத்துக்கு தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டி கொடுத்தார். அதில் அவர், ‘’அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாசார் வாய்ப்பு கொடுத்தது மிகப்பெரிய வரம். அதிலிருந்து பத்து வருடங்களுக்கு சினிமாவில் பிசியாக நடித்தேன். அதன் பின்னரே திருமணம் செய்ய முடிவெடுத்தேன். எனக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன. அவர்கள பார்ப்பதற்காக சினிமாவை விட்டு விலகி இருக்க முடிவு செய்தேன். தொடர்ந்து என் வீட்டுக்காரரின் ஹோட்டல் பிஸ்னசை எடுத்து நடத்தினேன்.

கேரளத்தில் எங்களுக்கு மூன்று, 5 ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளன. இதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதனால் சினிமாவை விட்டேன். ஆனால் என் மகள் கார்த்திகாவும், துளசியும் சிலபடங்களில் நடித்தனர். கொஞ்சம் காலம் ஆனதும் ஹோட்டல் பிஸ்னஸை குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும். இதுபோக கேரளத்தில் பல ரெஸ்டாரண்ட்கள், சினிமா தியேட்டர்கள், ஸ்கூல் என எங்களுக்கு உள்ளது. 4000க்கும் அதிகம் பேர் எங்களிடம் வேலை செய்கிறார்கள். சினிமாவுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறேன்.”என்றும் நெகிழ்ந்திருக்கிறார் ராதா.

You may have missed