இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. வருங்கால கணவர் குறித்து சுவாரசியமாக பதில் சொன்ன ராஷ்மிகா..!
கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படம் தான் புஷ்பா.
இந்த படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்து கொண்டுவருகிறது.
தற்போது சென்னையில் ஆடியோ லான்ச் நடைபெற்றது. அதில் பேசிய நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளர்கள் பல கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது அவரின் வருங்கால கணவர் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் கூறிய ரேஷ்மிகா. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் என்று விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதை மறைமுகமாக கூறினார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.