மோசடி என நினைத்து முதலில் நோ சொன்னேன்… ப்ரேமம் படம் குறித்து சாய் பல்லவி கூறிய காரணங்கள்..!

சினிமாவில் வெற்றி காணும் சில படங்கள் மக்கள் மனத்தில் இருந்து எப்போதும் நீங்காது. அந்த வகையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளிவந்த படம் தான் ப்ரேமம். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஹீரோவாக நிவின் பாலி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அனுபாமா, சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன். இந்த படத்திற்கு பிறகு இந்த மூன்று நடிகைகளுக்கும் பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

மேலும் இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனது. மேலும் அந்த கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இப்பொது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து வருகிறார். ப்ரேமம் படத்தினை தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சாய் பல்லவி ப்ரேமம் படத்தில் நடிப்பதற்கு முதலில் இயக்குனர் அல்போன்ஸ்யிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது நான் ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து கொண்டிருந்தேன். முதலில் அந்த அழைப்பு மோசடி பொய் என்று நினைத்து ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் அது உண்மை என்பதை தெரிந்து கொண்ட பின்னர் தான் நடிப்பதற்கு ஒத்து கொண்டேன் என்று கூறி உள்ளார்.

You may have missed