ஏ.ஆர்.ரகுமான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே.. தந்தையை போன்றவர் என்று உருக்கம்..!

தமிழ் சினிமாவில் ரோஜா என்ற படத்தின் மூலமாக  இசைப்பயணத்தை மேற்கொண்டவர் இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் திருமணம் நடந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவரின் அசிஸ்டன்ட் ஆன பாடகி மோஹினி டேவும் தன்னுடைய கணவரான மார்க்கை பிரிய இருப்பதாக அறிவித்துள்ளார். 28 வயதான இவர் பல இசையமைப்பாளர்கள் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்தும் பணியாற்றியுள்ளார். இவரும் இவரது கணவர் மார்க்கும் சேர்ந்து தான் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து  அவரின் அசிஸ்டன்ட்  பாடகி மோகினி டே  விவாகரத்து ரசிகர்கள் மத்தியில்  சந்தேகத்தையும் தூண்டி உள்ளது.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அதற்க்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோகினி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தந்தை போன்ற நபருடன் தொடர்புபடுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது என்றும் மேலும் எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். அதில் அவரும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

You may have missed