47 வயதில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்ட பாகுபலி நடிகர்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் எம்.குமரன் சன்  ஆப் மகாலக்ஷ்மி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் பென்மேட்சா சுப்புராஜ். இவர் அதனை தொடர்ந்து போக்கிரி, சரவணா, ஆயுதம். ஆதி, பாகுபலி 2. அசுரகுரு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் வில்லன் கதா பாத்திரங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இவருக்கு என்று ரசிகர்கள் பட்டளத்தை இவர் உருவாக்கி கொண்டார்.மேலும் இவர் பாகுபலி 2 மூலமாக மிகவும் பிரபலம் ஆனார். மேலும் இவருக்கு 47 வயதாகியும் சிங்கில் ஆக இருந்த இவர் தற்போது திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் வெகு விமர்சையாக நடந்துள்ளது.

மேலும் இவர் அவருடைய திருமண புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இறுதியாக திருமணம் நடந்து விட்டது என்றும் குறிப்ட்டுள்ளார். இவருக்கு பிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். மேலும்  ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

You may have missed