உங்க சகோதரர் இந்த ராசியா… நீங்களும் அதிர்ஷசாலி தான்..
‘மச்சான் துணை இருந்தால் மலை ஏறலாம்..அண்ணன் துணை இருந்தாக் வாழ்க்கையிலேயே ஜெயிக்கலா’ என கிராமப் பகுதிகளில் சொலவடை சொல்வார்கள். அண்ணன் ஒருவன் நல்லவனாக வாய்த்துவிட்டால் அவனுக்குப் பின் பிறக்கும் தபிகளின் வாழ்க்கை செட்டிலாகி விடும். அண்ணன் தன் உழைப்பை, கவனத்தை குடும்பத்தின் மீதும், தன் சகோதரர்கள் மீதும் செலுத்துவதுதான் இதற்குக் காரணம்
இதோ இந்த ராசியில் எல்லாம் அண்ணன்கள் இருந்தால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும். காரணம் இவர்கள் அவ்வளவு அனுசரணையாக இருப்பார்கள். அவர்கள் யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மகரம்.. இந்த ராசியில் உங்களுக்கு அண்ணன்கள் இருந்தால் உங்கள் பாக்கெட்டை எப்போதும் அவர்களின் பணத்தால் நிரப்புவார்கள். உங்களின் பிரச்னைகளின் போது தோல் கொடுத்து தீர்வு காண்பவர்களாகவும் இருப்பார்கள். உங்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர்கள் தீர்வு காணவும் முயல்வார்கள். உங்களின் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வார்கள்.
தனுசு.. இவர்கள் எப்போதும் உங்களை மந்தமாகவோ அல்லது தனிமையாகவோ உணரச் செய்ய மாட்டார்கள். உங்களின் மோசமான நாள்களில் கூட உங்களை அன்பால் மிளிரச் செய்வார்கள்.
துலாம் உங்கள் மீது, உங்களுக்கே தன்னம்பிக்கைக் குறைந்தாலும் துலாம் ராசியில் பிறந்த அண்ணன் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார். அவர் நல்ல ஆலோசகராகவும் இருப்பார். உங்களுக்கு கஷ்டத்தில் துணை நிற்பார்.
மேஷம் மேஷராசியில் பிறந்த அண்ணன் உங்களை எப்போதும் தனிமையாக உணரவே விடமாட்டார். உங்களின் சோர்வின் போதெல்லாம் அவர் உங்கள் விரக்திய போகச் செய்து இளைப்பாறுதல் தருவார். உங்கள் மனதை தேற்றும் சிறந்த அண்ணனாக இருப்பார்.
ரிஷபம்.. இந்த ராசியில் பிறந்த அண்ணன்கள் உண்மையான உள்ளன்போடு பாசத்தை காட்டுவார்கள். எந்த ரகசியத்தையும் இந்த ராசியில் பிறந்த அண்ணன் இருந்தால் நம்பி சொல்லலாம். எந்த நெருக்கடியிலும் விட்டுக்கொடுக்காத தோழராக இருப்பார்.