எப்போதும் அழகும், ஆரோக்கியம் இருக்க வேண்டுமா.. தூங்கச் செல்லும் போது இதை மட்டும் செய்யுங்க போதும்..
அழகு, ஆரோக்கியம் எப்போதும் தொடர வேண்டும் என்னும் விருப்பம் எல்லாருக்குமே இருக்கும்தானே? ஆனால் அது சாத்தியமில்லை என்றுதானே நாம் நினைப்போம். ஆனால் இரவு தூங்கச் செல்லும் முன்பு இதை மட்டும் செய்தாலே போதும். உங்கள் அழகு மேம்படும். அப்படி என்னதான் செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..
இரவு தூக்கத்துக்கு முன்பு ஆல்கஹால் அருந்துவதை நிச்சயம் தவிர்க்கவேண்டும். இப்படி மது அருந்துவிட்டு தூங்குவதால் நம் உடலில் இருக்கும் சரும செல்களில் அது பெரிய அளவில் இடையூறு செய்யும். அழகை மெயிண்டைன் செய்ய வேண்டுமானால் இரவில் ஆல்கஹால் அருந்துவதை நிச்சயம் தவிர்க்கவேண்டும்.
சதா சர்வநேரமும் மொபைல் பார்த்துக்கொண்டே இருந்தால் கண்களில் கருவளையம் வரும். முகப்பருவும் அதிகமாக வரும். இதற்குக் காரணம் போனின் திரையில் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதுதான். அதேபோல் சதா சர்வநேரமும் ஏசியில் இருந்தாலும் சரும செல்களில் பாதிப்பு உண்டாகும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் அழித்து சரும வறட்சியை உருவாக்குவ்தோடு, சீக்கிரமே ஓல்ட் ஏஜ் தோற்றத்துக்கும் நம்மை கொண்டு செல்லும். அதனால் ஏசியை கொஞ்சம் அணைத்துப்போட்டு வாழுங்கள்.
இதேபோல் நாம் நம் தலையணையின் உறையையும் அடிக்கடி மாற்றவேண்டும், அதன் அழுக்குகளின் மூலம் முகத்தில் முகப்பரு வர வாய்ப்புண்டு. இது எல்லாம் ரொம்பவும் சின்ன, சின்ன விசயம் தான். ஆனால் அதையெல்லாம் செய்தாலே நம் அழகு, ஆரோக்கியத்தை நச்சென பராமரிக்கலாம்.