ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கோலி சோடா படத்தில் நடித்த சிறுமி… வைரலாகும் போட்டோஸ்..!

சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருப்பவர்கள் வாய்ப்பு தேடி அலைவார்கள். அந்த வகையில் சினிமா மீது அதிகளவில் ஆர்வம் உடைய கோலிசோடா படத்தில் நடித்த சிறுமி சீதாவோ தன்னுடைய பள்ளியில் படிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு சாலையோரம் நடந்து செல்லும் வழியில் இயக்குநர் விஜய் மில்டன் கண்ணில் பட அவரோ இவருக்கு முதல் பட வாய்ப்பினை கொடுத்தார். அவரின் முதல் படம் தான் கோலி சோடா. இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. அதுவும் சீதா நடித்திருந்த கதாபாத்திரம் நல்ல பெயரை அவருக்கு பெற்று கொடுத்தது.

4 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் நடித்த இந்த படத்தில் அவர்களை சுத்தி நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் சீதா புட்டி கண்ணாடி ஒல்லியான தேகம் ATM என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருப்பார். தன்னுடைய நகைசுவையாலும் நடிப்பாலும் மக்களை எளிதில் கவர்ந்தார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இவர் பேசிய ஒரு செடி ஒன் பிளவர் என்ற காதல் டயலாக் மிகவும் வரவேற்பு பெற்றது.

இந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. விக்ரம் மற்றும் சமந்தா நடித்த 10 என்றதுக்குள்ள படத்திலும் இவர் நடித்திருந்தார். இதனை தோடர்ந்து பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது உள்ள போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாத அளவுககு மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed