காக்காமுட்டை படத்தில் நடித்த சிறுவனா இது… தற்போது ஹீரோ மாதிரி எப்படி இருக்காருன்னு பாருங்க…!

விளிம்புநிலை குடும்பத்தில் பிறந்த இருசிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட வரும் ஆசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘காக்காமுட்டை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது. கடந்த 2014ம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

இதில் விக்னேஷ், ரமேஷ் என்ற இருசிறுவர்கள் நடித்தனர். இவர்கள் இருவருமே சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த இவர்களை பார்த்த இயக்குனர் மணிகண்டன், அவர்களை நடிக்கவும் அழைத்துவந்தார். கடந்த 2015ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசியவிருதையும் இவர்கள் ஜனாதிபதி கையால் பெற்றனர்.

இந்நிலையில் காக்கா முட்டை சிறுவனின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மீசை, தாடியுடன் ஹீரோ ரேஞ்சுக்கு இருக்கிறார் காக்கா முட்டை சிறுவன். இணையத்தில் வைரலாகிவரும் இந்தப்படத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.

pic1

pic2

pic3

You may have missed