இமான் தான் எங்களுடைய அப்பா… பார்வையற்ற தம்பதியின் இரண்டு குழந்தைகளும் உருக்கம்…!
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தில் இசை அமைத்து அதன் மூலமாக ஆறுமுகம் ஆனவர் தான் இசையமைப்பாளர் இமான். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவருக்கென்று சினிமாவில் தனி அங்கீகராத்தை பெற்று கொண்டார். மேலும் இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றோர்கள் படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவருடைய இசைக்கு பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2022 ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர் இரக்க குணம் உடையவர். தன் கூட வேலை செய்பவர்களுக்கு பல விதத்தில் உதவி செய்துள்ளார். மேலும் இவர் பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்துள்ளார். இந்நிலையில் ஒரு பார்வையற்ற தம்பதியினரை இவர் மற்றும் இவரது மனைவி இருவரும் இணைந்து தத்தெடுத்து உள்ளனர். அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது. இரண்டு குழந்தைகளும் பிறக்கும் பொழுது கண் பார்வை நல்ல இருக்கவேண்டும் என்று இமான் வேண்டி கொண்டாராம். அந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு பார்வை நல்லாவே இருக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு பிறந்த நாள் வந்த நிலையில் அவர்களுடன் தான் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என இமான் மற்றும் அவரது மனைவி இருவரும் பிளான் செய்து கொண்டாடி உள்ளனர். இந்நிலையில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் உடைய அணைத்து தேவைகளையும் தாங்கள் தான் பூர்த்தி செய்வதாகவும் அந்த இரண்டு குழந்தைகளும் எங்களுக்கு இனிமேல் நீங்கள் தான் தந்தை எனவும் கூறி உள்ளதாம். இதனை கேள்வி பட்ட அனைவரும் இமான் மற்றும் அவரது மனைவியையும் பாராட்டி வருகிறார்கள்.