இரட்டை மகிழ்ச்சியில் நாகார்ஜுனா.. கோலாகலமாக நடந்து முடிந்த இளைய மகனின் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தருளும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவருக்கு என்று தமிழ் சினிமாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் மகன் தான் பிரபல நடிகர் நாக சைதன்யா.

இவரும் நடிகை சமந்தாவும் திருமணம் செய்து அவர்களது திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்தது. இந்நிலையில் இவருக்கு அண்மையில் நடிகை சோபிதா தூளிபாலியுடன் திருமண நிச்சயம் முடிந்தது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் நடிகர் நாகர்ஜூனாவின் இரண்டாவது மகன் அகில் அக்கினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். அதை தொடர்ந்து தெலுங்கில் மனம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் இறுதியாக ஏஜென்ட் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் இவருக்கும் ஸைனப் ராவ்தேஜ்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளநிலையில் இன்று இவர்களில் நிச்சயம் தட புடலாக நடந்துள்ளது. இவர்களில் நிச்சய புகைப்படத்தை வெளியிட்டு நடிகர் நாகார்ஜூனா அனைவரும் தன்னுடைய மகனையும் மருமகளையும் வாழ்த்தும் படி கேட்டுள்ளார். பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.