தனுஷின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. சந்தோஷத்தில் போட்டோஸ்களை வெளியிட்ட நடிகை மீனா..!

நடிகர் நெப்போலியன் இவர் தன்னுடைய நடிப்பின் மூலமாக சினிமாவில் முன்னணி நடிகராக நீங்காத இடம் பிடித்தவர். முதலில் வில்லனாக நடித்த இவர் அதன் பிறகு தான் கதாநாயகனாக ஆரம்பித்தார்.மேலும் இவர் அரசியலிலும் தன்னுடைய பங்கை வெளிக்காட்டி உள்ளார். மேலும் இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் தான் தனுஷ். அவருக்கு சிறுவயதில் இருந்தே தசை சிதைவு என்ற நோய் இருக்கிறது.

தன் மகனுக்கு திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்காக பெண் பார்த்து சமீபத்தில் மகனில் நிச்சயதார்தத்தையும் நடத்தி முடித்தார். மேலும் திருமண சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்தது.இந்நிலயில் இவர்களின் திருமணம் ஜப்பானில் நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

தடபுடலாக நடந்து முடிந்த தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடி திருமணத்தில் சினிமா பிரபலங்கள் மீனா, குஷ்பூ, சுஹாசினி, ராதிகா, சரத்குமார்,பாண்டியராஜன், கலா மாஸ்டர், கார்த்தி மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த போட்டோஸ்களை நடிகை மீனா சந்தோஷத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த திருமண ஜோடிகளுக்கு வாழ்த்தையும் கூறியுள்ளார்.

pic1

pic2

pic3