பருத்திவீரனின் இளம் வயது முத்தழகா இவர்..? தற்போதைய புகைப்படம் இணையத்தில்…

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் முதல் படம் தான் பருத்திவீரன். 2007 பிப்ரவரி 23 ல் அமீர் இயக்கத்தில் வெளியான இப்படம் 100 நாள் மேல் திரையில் ஓடி பெரும் வசூல் திரட்டியது. இதில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, ப்ரியாமணி என பலரும் நடித்துள்ளனர்.


இதில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்திரமாகவே மாரி மதுரை பேச்சு , நடை, உடை, பாவனை என அனைத்தையும் நம் கண் முன் காட்டினர். விழா ஒன்றில் பருத்தி வீரன் படத்தை பார்த்து விட்டு இது கார்த்தியின் முதல் படமா என்று வியந்தேன் என ரஜினிகாந்த் அவர்கள் பெருமையாக கூறி இருப்பார்.


படம் வெளியே வந்து 17 வருடங்கள் ஆகியும் முத்தழகு என்றால் பிரியாமணியை நினைவு கூறும் வகையில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். இப்படத்தில் “அறியாத வயசு புரியாத மனசு” பாடல் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.
இப்பாடல் மூலம் அனைவரின் மனம் கவர்ந்த இளம் வயது முத்தழகு புகைப்படம் தற்போது இணையத்தில் இவரா அவர் என வியக்கும் அளவில் பரவி வருகிறது .