அடடே நடிகை சங்கீதாவின் மகளா இது? எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க..!

நடிகை சங்கீதா தான் ஏற்ற கதாபாத்திரத்தில் நல்ல தேர்ந்த நடிப்பை வழங்குவார். சீயான் விக்ரம் நடிப்பில், பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் சங்கீதாவின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அவரது திரைப்பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக பிதாமகன் இருக்கிறது.

பிதாமகன் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற சங்கீதா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகை சங்கீதா, பாடகர் கிருஷ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் ஷிவியா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. சங்கீதா இப்போது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கு கொண்டு வருகிறார்.

அவருக்குக் கிடைத்த தமிழக அரசின் கலைமாமணி விருதினை தன் செல்ல மகள் ஷிவியாவின் கழுத்தில் விட்டிருந்தார். தற்போது அவர் மகளுடன் குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அடடே நடிகை சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? அழகாக இருக்காரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

You may have missed