ஆத்தி திமிருபட வில்லி நடிகையா இது… தற்போதும் மார்டன் உடையில் செம அழகாக இருக்காரு பாருங்க..

கிரிக்கெட் வீரர் பரத் ரெட்டியின் மகள்தான் ஸ்ரியா ரெட்டி. அம்மணி திமிரு படத்தில் வில்லியாக நடித்தார். ஆனால் இந்தப்படமே அவரை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது. நெகட்டிவ் பாத்திரம் ஏற்ற முதல் படத்திலேயே அவரின் தேர்ந்த நடிப்பு பலரையும் அவரைக் கவனிக்க வைத்தது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தார்.

படிக்கும்போதே மாடலிங் வாய்ப்புகளும் வந்தது. ஆனால் அவரது தந்தை பரத் ரெட்டிக்கு மகளின் படிப்புமீதே ஆசை இருந்ததால் மாடலிங்கிற்குப் போகாமல் படிப்பைத் தொடர்ந்தார். வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரியான ஸ்ரியா ரெட்டி, சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வலம்வந்தார். தொடர்ந்து அவருக்கு, விக்ரம் நடித்த ‘சாமுராய்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புகிடைத்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஸ்ரியா ரெட்டி அதன் பின்னர் நடிப்பதற்கு முழுக்குப் போட்டார்.

இந்நிலையில் ஸ்ட்ரியா ரெட்டி கடந்த ஆண்டு ‘அண்டாவை காணோம்’ என்னும் படத்தில் வில்லியாக நடித்தார். இந்நிலையில் அம்மணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடன் முறையில் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் . அதைப் பார்த்தவர் ஸ்ட்ரியா ரெட்டியா இது? என ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துவருகின்றனர்.

pic1

pic2

pic3