நடிகை சிம்ரனின் மகனா இது… அவருக்கு இவ்வளவு பெரிய மகனா.. எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சிம்ரன். விஜயகாந்த், சரத்குமார், கமல் என சீனியர் நடிகர்களோடும், அஜித், விஜய் என இளம் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த பெருமை இவருக்கு உண்டு.

தனது அழகான டேன்ஸினாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ்த்திரையுலகில் பிஸியாக இருந்தபோதே, தீபக் என்ற தன் நண்பரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னர் ஏற்கனவே தான் கமிட் ஆகியிருந்த உதயா திரைப்படத்தில் மட்டும் நடித்தார் சிம்ரன். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார் சிம்ரன்.

கடந்த 2003ல் திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு இப்போது ஆதீப், ஆதித் என இரு மகன்கள் உள்ளனர். தற்போது சிம்ரன் தன் மூத்தமகனோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா? என கமெண்ட் செய்துவருகின்றனர்.

pic1

pic2

pic3

You may have missed