விஜய்யின் 69 வது படத்தில் டாப் குக் டூப் குக் மோனிஷா… தன்னுடைய கனவு நினைவாகியது என பதிவு…

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிதான் குத் விக் கோமாளி அதில் கலந்து கொண்டவர் தான் மோனிஷா. அதை தொடர்ந்து சன் டீவியிலும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும் இவர் சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான விஜயுடன் நடிப்பதை பலரும் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் தற்போது விஜய் நடிக்கும் படம் தளபதி 69. அதில் விஜயுடன் நடிப்பதற்கு மோனிஷாக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரும் அவருடைய தீவிர ரசிகை ஆவர்.

மேலும் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தினை எச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையம்மைக்கிறார்.மேலும் இந்த படத்தில் கெளதம் மேனன் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நரேன் பூஜா ஹெஹ்ட் மம்தா பாபி தியால் ஆகியோர் நடிக்க உள்ளனர். நடிகை பிரியாமணியும் இந்த படத்தில் இணைந்து உள்ளார். இதில் மோனிஷாவும் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை ஆனது சமீபத்தில் நடைபெற்றது . மேலும் இந்த படத்தின் பட பிடிப்பும் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்தின் பூஜையில் மோனிஷாவும் கலந்து கொண்டார். விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு நினைவாகி விட்டது எனவும் கூறி எமோஷனலாக அவர் பதிவிட்டிருக்கிறார் . மேலும் அவர் விஜய் உடன் எடுத்த போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.