சில்ட்ரன்ஸ் டே ஸ்பெஷல்.. வேட்டி சட்டையில் தூள் கிளப்பும் விக்னேஷ் மற்றும் நயன் குட்டிஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும்  லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர்.

மேலும் இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில்   ஹிந்தி நடிகர் ஷாருகான் உடன் இணைந்து ஜவான் படத்தினை நடித்து பாலிவுட்டிலும் தன்னுடைய தடத்தை பதித்துவிட்டார். மேலும்  இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் தற்போது யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் நிவின் பாலியுடன் இணைந்து மலையாளத்தில் டியர் ஸ்டுடென்ட்ஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நயன் மற்றும் விக்னேஷ் ஜோடி தங்களுக்கு வேலைகள் இல்லாத நேரத்தில் தன்னுடைய குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடனை நேரத்தை செலவளித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் தினத்தை தன்னுடைய குழந்தைகளுடன் கோலாகலமாக கொண்டாடிய நயன் மற்றும் விக்னேஷ் ஜோடி தற்போது குழந்தைகள் மற்றும் விக்னேஷ் சிவன் வேட்டி சட்டையிலும் நயன் பச்சை கலர் சாரியிலும் எடுத்துக்கொண்ட  போட்டோஸ்கள் தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5

You may have missed