அய்யோ… என்ன கை விட்றாதீங்க….. வில்லன் போல் திருட வந்த இடத்தில் கோமாளியான திருடனின் பரிதாப காட்சிகள்…

ரெயில் பயணங்களில் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று இந்த காட்சிகள் நமக்கு விளக்குகிறது. பயணங்களின் போது போக்குவரத்துறைகளான பேருந்துகளிலோ, ரயிலிலோ யாரேனும் நம்மிடம் பேச முயன்றால் முன், பின் தெரியாத நபர்களிட்ம் கவனத்துடன் இருப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்கள் சாப்பிட ஏதாவது கொடுத்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள். இப்படி என்னதான் கவனமாக இருந்தாலும் திருடும் எண்ணம் உடையவர்கள் தந்திரத்துடன் இருப்பார்கள்.

வடஇந்திய பகுதிகளில் முக்கியமாக ரெயில் பயணங்களில் திருடர்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் பிகார் மாநிலத்தில் திருடன் ஒருவன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவரின் செல்போனை ஜன்னல் ஓரத்தில் இருந்து பறிக்க முயன்றான். இதை சுதாகரித்து கொண்ட பயணி திருடனின் கைகளை இறுக்க பற்றிக்கொண்டார்.இந்நிலையில் இரயில் புறப்படவே தப்பித்து போக முடியாதவாறு ஜன்னல் கம்பிகளுக்கு வெளியில் தொங்கி கொண்டே பிரயாணம் செய்தான். செவ்வதறியாது விழித்த திருடன் ஜன்னல் கம்பியை இன்னொரு கையால் பிடித்துக்கொண்டான். திருட வந்த இடத்தில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் மாட்டி கொண்டதால் தப்பி செல்ல முடியாமல் தொங்கிய படியே பத்து கிலோமீட்டர் பிரயாணம் செய்தான்.

இறுதியில் ரெயில் நின்றதும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி மறைந்து விட்டான். அவன் செய்தது திருட்டு என்றாலும் மாட்டி கொண்டு தப்பிக்க முடியாமல் கதறியபடியே 10 கிலோமீட்டர் பிராயாணம் செய்தது காமெடி காட்சியாக மாறியது. தற்சமயம் இந்த கானொலி சமூக ஊடங்களில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed