நடிகை கௌதமியின் மகளா இவங்க..? இவங்களும் ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!

நடிகை கௌதமி 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் தமிழில் குரு சிஷ்யன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவரது பெற்றோர்கள் தொழில்முறை மருத்துவராவர்கள். ஆந்தராவை பூர்வீகமாக கொண்டவர், அறிமுக படத்திலேயே ஹிட் ஆனதால் அவர் தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாளம் ஒரு பல மொழி படங்களில் ஒரு ரவுண்டு வந்தார். 1998 ஆம் ஆண்டு சந்தீப் பட்டியா என்ற தொழிலதிபரை மணந்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். அவர் பெயர் சுப்புலெட்சுமி. அடுத்த வருடமே விவாகரத்தும் ஆகிவிட்டார்.

2000- பிறகு தொலைக்காட்சியில் சீரியல், தொகுப்பாளர் என சின்னத்திரையுலும் தடம் பதித்தார். மேலும் பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். 2009 இல் வெளிவந்த தசாவதாரம் படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற விஜய் டெலிவிஸன் அவார்ட்ஸ் பெற்றுள்ளார். விஸ்வரூபம் படத்திற்காகவும் அவார்ட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் லைப் அகைன் அறக்கட்டளை மூலம் சேவைகள் செய்துவருகிறார். இவரது மகள் சுப்புலெட்சுமி சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தினை பகிர்ந்து வருவார்.தற்போது பகிரப்பட்ட இந்த புகை படங்கள் அவர் சினியுலகில் அடி எடுத்து வைக்க தயாராகி வருவதாக தெரிகிறது, மாடர்னாக சிகை அலங்காரம் செய்து பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது உள்ள நடிகைகள் பலருக்கு போட்டியாக வர வாய்ப்பிருப்பதாக உள்ளது.

pic1

pic2

You may have missed