இந்த அன்புக்கு வார்த்தைகளே இல்லை… ஒரே தட்டில் உணவை பகிர்ந்த விவசாயி..!

விவசாயிகள் உயிராக நினைக்கும் இரண்டு விஷயங்கள் விதை பயிர்கள் அல்லது விதை நெல்கள் இன்னொன்று வீட்டில் வளர்க்கப்படும் முக்கியமாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள். தை திங்கள் பொங்கல் விழாவாக கொண்டாட காரணம் உலக உயிர்களுக்கு உணவு வழங்க விவசாயம் செழிக்க காரணமாக இருக்கின்ற இயற்கைக்கும், சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் விழா சூரியன் உதயத்தின் போது வைத்து வழிபடுகின்றனர் தமிழர்கள். மறுநாள் காணும் பொங்கல் அன்று வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக கால் நடைகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, தொழுவங்களுக்கு சாம்பிராணி தூபம் இட்டு பொங்கல் வைத்து வணங்கி நன்றி செலுத்துவது தமிழர் பண்பாடு.

தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் அனைத்திலும் ஒரு காரண காரியம் இருக்கும்.வெறுமனே கடமைக்காகக் செய்யாமல் உணர்வு பூர்வமாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்வார்கள். வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள், விவசாயத்திற்கு ஊன்று கோலாக இருக்கும் ஆடு, மாடுகளுக்கும் செல்ல பெயர் வைத்து அழைப்பார்கள். ஆடு , மாடுகள் ஒலி எழுப்புவதை வைத்து எதனால் அது சத்தம் மிடுகிறது என்று காரணத்தை அறிந்து கொள்வார்கள். அந்த விலங்குகளுக்கு எது தேவை என்பதை அறிந்து உடனடியாக நிறைவேற்றுவார்கள்.

வீட்டில் உள்ள ஒருவர் போன்றும், குழந்தைகள் போன்றும் கொஞ்சி மகிழ்வார்கள் விவசாயிகள். இயற்கையையும், மண்ணையும், கால் நடைகளையும், அக்கறையோடும், அன்போடும் பாதுகாக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அது விவசாயிகள் மட்டுமே.

உங்கள் வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறீர்கள் என்றால் வீட்டில் வளர்க்கப்படும் கால் நடைகளையும் சேர்த்து எண்ணிக்கையில் கூறும் குடும்பத்தினரும் இருக்கவே செய்கிறார்கள். தற்கால சமுதாயத்தினர் இதெல்லாம் பூமர் அங்கிள் வேலை என்று மட்டம் தட்டும் காலத்தில் 2k-கிட்ஸ்களுக்கு ரோல் மாடலாக இளைஞர் ஒருவர் வைரல் ஆகி வருகிறார். அப்படி என்ன செய்தார் என்றால் இப்படி கூட ஒரே தட்டில் வீட்டு விலங்குகளுடன் உணவை பகிர்ந்து கொள்வார்களா………என்ற ஆச்சர்யமும், அதிசயமும் சமூக வலைதளவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்

You may have missed