யாரும் பண்ணாத காரியத்தை வைத்து தொழில் தொடங்கியுள்ள நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள்…குவியும் வாழ்த்துக்கள்….
தென்னிந்தியாவில் மிகப்பெரிய பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் அர்ஜுன். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளில் நடித்துள்ளார். சண்டை காட்சிகள் அதிகமாக உள்ள திரைப்படங்களில் நடித்ததால் ஆக்க்ஷன் கிங் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் கர்நாடக அரசின் சிறந்த நடிக்கருக்கான விருது பெற்றுள்ளார்.இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் சினிமாவில் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரை படங்களில் பார்க்க முடியவில்லை.
இப்போது அர்ஜுனின் இரண்டாவது மகள் ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார். அதாவது, பழங்களை தின்ற பிறகு வரும் பழங்களின் தோல்களை வைத்து ஹாண்ட் பைகளை உருவாக்கியுள்ளார். இந்த வகையான பேக்குகளை விற்பனை செய்வதற்கு சர்ஜா என்ற நிறுவனத்தை திறந்துள்ளார்.
இதில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு தொடங்கி வைத்துள்ளார். இந்த விழா ஹைதராபாதில் நடைபெற்றது. பழ தோல்களை கொண்டு வித்தியாசமாக பேக் செய்வது இதுதான் முதல் முறை என்பதால் அஞ்சனா அர்ஜுனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.