இந்த 6 இராசிக்காரர்களும் பேரும் புகழும்க்காகவே பிறந்தவர்கள்… உங்க ராசி இருக்கானு செக் பண்ணுங்க..

பணம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பெயர், புகழ் சம்பாதிப்பது எல்லாருக்கும் வாய்க்காது. ஆனால் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அது ரொம்ப இயல்பாக வாய்த்துவிடும்.

சிம்மம்..

புகழை பெறுவதோடு அதை தக்கவைக்கும் திறமையும் இவர்களுக்கு உண்டு. புகழுக்கு இயல்பாகவே இவர்கள் தகுதியானவர்கள். சில விபரீத செயல்கள்கூட இவர்களுக்கு புகழைத்தேடித் தரும்.

தனுசு

புகழை பெறுவது இவர்களுக்கு எளிது. அதேநேரம் புகழை இழக்கவும் இவர்கள் பயப்படுவதே கிடையாது. இவர்கள் சில சரியான செயல்கள் மூலம் இழந்த புகழை மீண்டும் சம்பாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர்கள்.

மேஷம்

இவர்கள் போர்வீரரின் குணத்தை கொண்டவர்கள். அதனால் புகழை அடையும் தகுதி இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். இவர்கள் போலியான புகழ்மீது ஆசைப்படவே மாட்டார்கள். வலிமையும், அதிகாரமும் இவர்களுக்கு கூடவே இருக்கும். இதனாலேயே இவர்களை தலைமை பொறுப்பு தேடிவரும்.

விருச்சிகம்

உடனடியாக புகழை பெற வேண்டும் என நினைக்காமல் தன்னை வளர்த்து தகுதிப்படுத்திக்கொண்டு அந்த புகழை அடைவார்கள். புகழும், அதிர்ஷ்டமும் எப்போதும் இவர்களுடன் இருக்கும்.

கடகம்..

என்ன வேலை செய்தாலும் அதில் கவனமும், புகழும் தேடி வரும். மற்றவர்களின் ஆர்வத்தை தூண்டுவது, தன்னைப் பற்றி அனைவரையும் பேச வைப்பது என்பது குறித்து இவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

கன்னி

கவனத்தை ஈர்க்கும் இவர்கள் தங்கள் புகழுக்கு ஏற்ப வெகுமதியும் எதிர்பார்ப்பார்கள். எனவே ஒருபோதும் அதை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதனால் புகழுக்கு பிரச்னை வரும்போது அதை பாதுகாக்க போராடுபவர்கள்.

இந்த 6 ராசிக்காரர்களும் அந்தவகையில் கொடுத்துவைத்தவர்கள் தான்!

You may have missed