அடேங்கப்பா இவளவு சின்ன எடுத்துல இவுளோ மீனுங்களா… இப்படியெல்லாம் கூட மீன் வளர்க்க முடியுமா…

பொதுவாக கோழி, ஆடு, மாடு என வளர்ப்பவர்கள் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் மீன் அனைவரும் வளர்க்க முடியாது. காரணம், கோழி, ஆடு, மாடு எல்லாம் வீட்டுப் புழக்கடையில் இடம் இருந்தாலே வளர்த்து விடலாம். ஆனால் மீன் அப்படி அல்ல. அது தண்ணீரில் வாழும் உயிரி என்பதால் மீன் வளர்க்க விரும்புபவர்கள் முதலில் அதற்கு ஏற்றதுபோல் குளம் வெட்ட வேண்டும்.

அதிலும் கடலிலோ, ஆற்றிலோ வரும் எல்லா மீன்களையும் வளர்த்துவிட முடியாது. நம் அரசாங்கமே நம் இந்தியாவுக்கு ஏற்ற வாழ் சூழலாக கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை ரக மீன்களை அறிவித்துள்ளது. அந்த ரகம் தான் நம் நாட்டு சுழலுக்கு ஏற்ற முறையில் விறு, விறுவென வளரும். அதேபோல் பொதுவாகவே நாம் மீன்வளர்ப்பிற்கு பெரிய சைஸ் குளம் வேண்டும் என்றுதான் நினைப்போம்.

ஆனால் இங்கே அப்படியில்லாமல் மிக, மிக சின்ன பரப்பில் கூட்டம், கூட்டமாக கொத்து, கொத்தாக மீன் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இந்த மீன்களுக்கு ஏதோ கோழிக்கு தீவனம் போடுவது போல் உணவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கொத்து, கொத்தாக இவ்வளவு மீன்களைக் கூட்டமாக வளர்க்க முடியுமா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்த மீன் பண்ணை பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

You may have missed