தயிருக்கு பின் இந்த பழத்தை மறந்தும் சாப்பிடாதீங்க மக்களே… ஒரு பயனுள்ள பதிவு..
நாம் உண்ணும் உணவில் தான் நம் மொத்த ஆரோக்கியமும் இருக்கிறது. நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே நோய்களற்ற நீண்ட ஆயுளைப் பெற முடியும். அதனால் தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என சொல்லி வைத்தார்கள்.
பொதுவாக பழங்கள் சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தான். அதே நேரம் அந்த பழங்களுக்கும் சில தன்மை இருக்கிறது. அதை சாப்பிட்டு விட்டு, அதனோடு சிலவற்றை சேர்த்து சாப்பிட்டால் மரணம் கூட நிகழும் வாய்ப்பு இருக்கிறது. அதிலும் பலாப்பழத்தை சாப்பிடுவதில் மிகப்பெரிய சூட்சமமே இருக்கிறது.
நம்மில் சிலருக்கு தயிர் என்றால் ரொம்பப் பிடிக்கும். முக்கனிகளில் ஒன்றான பலாவை இதோடு சேர்த்து சாப்பிட்டால் சங்கு தான்! அது ஏன் என்கிறீர்களா? பலாவையும், தயிரையும் சேர்த்து சாப்பிடும்போது, அதில் உள்ள ஊட்டச்சத்துகள் ஒன்றுடன் ஒன்று கலக்கும். இதனால் செரிமான பிரச்னை, சருமபிரச்னையும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் அறிவியலாளர்கள் தயிரையும், பலாப்பழத்தையும் சரியான அளவில் கலந்து சாப்பிடுவதால் இருமடங்கு பலன் தரும் என சொல்கிறார்கள். ஆனால் சேர்த்து சாப்பிட்ட பலரும் கடுமையான வயிற்று உபாதைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். சிலர் மெட்டபாலிசத்தை இழந்திருக்கின்றனர். பலவீனமானவர்களுக்கு செரிமான பிரச்னை நிகழ்ந்து உயிரே போகும் அபாயமும் இருக்கிறதாம்.
பொதுவாகவே பலாப்பழம் பெங்குடலில் இருக்கும் கழிவினை வெளியேற்றும். எனவே பலாவை தொடர்ந்து சாப்பிட்டால் செரிமான மண்டல செயல்பாடுகளை சீராக்கும். காரணம் அதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதுதான். சிலர் பலாவை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுவலி வரும் என தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது.
இருந்தாலும் தயிருக்கு பின் பலா பழத்தை மறந்தும் சாப்பிட்டுறாதீங்க மக்களே!