அடிக்கடி பல்வலி வருகிறதா.. இயற்கையான முறையில் போக்கஇதை மட்டும் செய்யுங்க போதும்…
பல் வலி பலருக்கும் பெரும் பிரச்னையாய் இருக்கும். பல் மருத்துவரிடம் போய் பல் பிடுங்க போகிறவர்களாக இருந்தாலும் சரி ஒருமுறை இதை முயற்சித்துப் பார்த்துவிட்டு செல்லுதல் நலம்.
நெல்லிக்காய், கடுக்காய் தோன்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியைக் கொண்டு பல் விளக்கலாம். இதேபோல் பனங்கிழங்கை குப்பைமேனிச் சாறில் அரைத்து நல்ல எண்ணெயில் காய்ச்சி உபயோகித்தால் பல்வலி குறையும். இதேபோல் கொள்ளுக்காய் வேரை கொதிக்க வைத்தும் கொப்பளிக்கலாம். சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கினாலும் பல் வழி பறந்துவிடும். மகிழ மரப்பட்டையை பொடியாக்கி பல்துலக்கினாலும் பல் வலி அண்டாது. இதேபோல் வாகை மரப்பட்டையை எரித்துப் பொடித்துப் பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.
கருவேலம் பட்டையில் பல் துலக்குவதும் பல்வலிக்கு அருமருந்து. மாசிக்காயைத் தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து கொப்பளித்தால் ஈறு பலம்பெறும். இதேபோல் அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பல் துலக்கலாம். கடுகைப் பொடி செய்து வலிக்கும் இடத்தில் போட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். இதே போல் வெங்காயத்தை சாறு பிழிந்து பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவும். ஆலம்பூ மொட்டினை வாயில் அடக்க பல்வலி போய் விடும். இதேபோல் அருகம்புல்லை நன்கு வெட்டி வலி உள்ள பக்கம் அடக்கி வைத்தால் வலி பறந்து போகும்.
இதேபோல் கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து ஈறில் தடவினாலும் வலி போகும். துத்தி இலை மற்றும் வேர்க்கசாயம் வைத்து வாய் கொப்பளித்தாலும் பல் வலி மட்டுப்படும். இதேபோல் மா பூக்களை வாயிலிட்டு மென்றாலும் வலி குறசியும். கருஞ்சீரகத்தை வினிகரில் வேகவைத்துக் கொப்பளித்தால் பல்வலி பறந்துவிடும். இதேபோல் கண்டங்கத்திரி விதையை நெருப்பில் சுட்டு வரும் புகையை பற்களின் மேல் படும்படி செய்தால் வலி பறந்து போகும்.
உப்பை நன்றாக வறுத்து அதை சிறுதுணியில் மூட்டை போல் கட்டி சூட்டுடன் பல் வலியுள்ள இடத்தில் ஒத்தடமும் கொடுக்கலாம். பல் வலி அதிகரிக்கும்போது, வாயில் சிறிது அச்சு வெல்லம் அடக்கிக் கொண்டு ஒரு ஸ்பூன் மிளகுத்தூளை கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் வலிக்கும் கன்னப்பகுதியில் தேய்த்தால் வலி பறந்துவிடும். பாகற்காய் கசக்கும் என்பதால் நம்மில் பலரும் அதை ஒதுக்கி வைக்கிறோம். ஆனால் பாகல் இலையை மென்று தின்றால் பல வலி பறந்துவிடும்.
மிளகு தூளுடன் உப்பும் சேர்த்து பல் விளக்கினால் பல் வலி போவதோடு, சொத்தைப்பல், வாய் துர்நாற்றம் பிரச்னையும் தீரும். ஈறுகளில் வீக்கம், வலி ஏற்பட்டால் பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாக தேய்க்க உள்ளிருந்த கெட்ட நீர் வெளியேறி வலியும், வீக்கமும் போய்விடும். பல் துலக்கிய பின்பு, ஒரு நெல்லிக்காயை மென்று சாப்பிட்டால் பல் வலி குறைந்து இருப்பதை உணரமுடியும்.
அப்போ, இனி பல்லு வலிக்கு அலோபதியைத் தேடி ஓட மாட்டீங்க தானே?