90’ஸ்ஸில் பிறந்தவர்களா நீங்க… இதை படிங்க கண்ணு கலங்கும்..நெஞ்சு குதூகலிக்கும்…
காலம் வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தெருவையே திடலாக்கி விளையாடிய குழந்தைகள் எல்லாம், இப்போது கம்யூட்டரின் முன்னால் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பத்து வயதைத் தாண்டுவதற்குள் கண்ணாடி அணிந்து கொண்டு நிற்பவர்களைப் பார்க்கையில் 90 களின் காலம் திரும்ப வராதா? என ஏங்கித் தவிக்குது மனசு.
பல ஊர்களில் பால்காரர்களின் பெயரே ‘மணி அடிச்சான்’ தான். சைக்கிளின் முன்னால் ஒரு மணியை கட்டிப்ப்போட்டு அடித்துக் கொண்டே வருவார்கள். இன்றைய நாளைப் போல தெருவுக்கு, தெரு பால் பாக்கெட் விற்பனையகங்கள் முளைக்காத பொழுது. ஆவின் பால் பாக்கெட்டே எங்களுக்கு பெரிதென தெரியும் அந்த பொழுதுகளில் மணியடிச்சான் பாலுக்காக, தூக்கு வாளியுடன் காத்திருந்து அம்மா பால் வாங்கி வந்து, பசும் பாலில் தேநீர் போட வராந்தாவில் பேப்பர்களை பரந்தி செய்தித்தாள் படிக்கும் அப்பாக்கள் காலம் அது. இன்று வாட்ஸ் அப்பில், கைபேசியில் செய்தியை பார்க்கிறோம்.
வீட்டில் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு தங்களேயே ஆசிரியராக பாவித்து மனப்பாடம் செய்யும் பொழுது அவை. ஆசிரியர்கள் கடவுளுக்கு சமம் என மதித்த காலம் அது. இப்போதெல்லாம் ஆல் பாஸ் சிஸ்டம், பள்ளிக்கூடத்தில் அடிக்கக் கூடாது என வகுப்பறையே மாறிவிட்டது.
அன்றைக்கு டீச்சர் கையில் அடித்த தடத்தின் சிவப்பு நிறம், எங்களின் வாழ்க்கையை சிறப்பாகவே மாற்றியது.
. வீட்டில் அக்காவுக்கோ, தங்கைக்கோ அம்மா மாலையில் வகுப்பெடுத்து தலை சீவுவார். உதிரியாய் மல்லிகை, பிச்சி என வாங்கி வந்து கைப்பட கட்டுவார். ஒற்றை சடையும், ரெட்டை சடையும் போட்டு துள்ளி விளையாடும் குழந்தைகளை இன்று காணோம்.
வாரம் ஒருநாள் தூர்தர்ஷனில் ஒலியும் ஒளியும் என புதுப்பாடல் போடுவார்கள். ஊர் கூடி டிவி இருக்கும் வீட்டு முன்பு பார்க்கத் திரள்வார்கள். கிராமங்களில் நூலகங்களிலும், பொது இடங்களிலும் ஊர் கூடிப் பார்க்க டிவிப் பெட்டி இருந்தது. இன்றைக்கு கிராமங்கள் தோறும் பிரவுசிங் செண்டர் இருக்கிறது. பரீட்சை ரிசல்டை பார்க்க தினத்தந்தியை தேடினோம். அந்த நிலை இன்று தலைமுறைக்கே தெரியாது.
குட்டிப்புல், கோழிக்குண்டு, பம்பரம், தீப்பெட்டி அட்டையை சேகரித்தது அடேங்கப்பா ஒன்றா, இரண்டா விளையாடிய விளையாட்டுகள்? தாவணியையும், வேட்டியையும் இளந்தாரிகள் உடுத்திப் பார்த்த தலைமுறையும் அதுதான். இன்றைக்குத் தான் பிளாஸ்டிக் கவர், கேரிபேக்கிற்குத் தடை. மஞ்சள் பைகளின் காலம் அது!
இது முழுதாகச் சொல்லி விடவில்லை. 90ன் காலம் இன்னொரு பதிவிலும் தொடரும்! உங்களின் நினைவுகளையும் கமெண்டில் அடுக்குங்களேன். தொகுத்துவிடுவோம்.