நான்கு வயது சிறு குழந்தையின் பார்வையை பறித்த ஷ்மார்ட் போன்…பெற்றோர்களுக்குகான ஒரு பதிவு..

இன்று குழந்தைகள் செல்போனுக்கு உள்ளேயே சங்கமித்து இருக்கிறார்கள். இதனால் மிகக் கொடூரமான பாதிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். ஒரு நான்கு வயது குழந்தை இதன் உச்சமாக பார்வையையே இழந்து உள்ளது.

இன்று கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகள் மிக அதிகம். இதனால் இவர்கள் வேலைக்கு செல்லும் பரபரப்பு சூழலுக்கு உள்ளே சிக்கிக் கொண்டு குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவது இல்லை.

இதனால் அவர்களின் செல்ல சினுங்கல் கூட பிடிக்காமலோ அல்லது அவர்களுடன் நேரத்தை செலவிட நேரமின்மையாலோ அவர்களது கரங்களில் செல்போனையும், டேப்லெட் களையும் கொடுத்து விட்டு ரிலாக்ஸ் ஆகிவிடுகின்ரனர். இப்படி தன்னுடைய குழந்தையின் கையில் ஷ்மார்ட் போனைக் கொடுத்த ஒரு தந்தை இப்போது தன் பிஞ்சுக் குழந்தை கண் பார்வை இழந்திருப்பது குறித்து உருக்கமாக எழுதி இருக்கிறார்.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் தக்சர் நியூஷ்டிக்கர் சூயிடுஷ், இவரது குழந்தைக்கு இப்போது நான்கு வயது ஆகிறது. இவர் தன் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும் போதே அதற்கு விளையாட ஷ்மார்ட் போனை கொடுத்து பழக்கப்படுத்தி இருக்கிறார். அந்த குழந்தை அப்போது முதல் 4 வயது வரை தொடர்ந்து ஷ்மார்ட் போனை பார்ப்பதும், விளையாடுவதுமாக இருந்தது. திடீரென்று சமீபத்தில் தன்னால் பார்க்க முடியவில்லை என குழந்தை அழுதது.

உடனே அதன் தந்தை பக்கத்தில் இருந்த கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் கருவிழி முற்றாக சேதம் அடைந்து இருப்பதை கண்டுபிடித்தனர். சிதைந்து போன பிரதிபலிப்பு என்னும் ஒருவகையான கண் நோயால் குழந்தை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

குழந்தைக்கு உடனே தீவிர அறுவை சிகிட்சை செய்த மருத்துவர்கள் 80 சதவிகித பார்வையை மீண்டும் கிடைக்கச் செய்தனர். குழந்தைக்கு தான் சின்ன வயதில் இருந்தே ஷ்மார்ட் போனைக் கொடுத்து பழக்கியதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது என தன் சோசியல் மீடீயாவில் உருக்கமாக பகிர்ந்து உள்ளார் அந்த குழந்தையின் தந்தை

இது வெறும் அவரது முகநூல் பதிவு அல்ல. உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கான எச்சரிக்கை அறைகூவல் என்றே சொல்லலாம்.

பெற்றோரே உங்கள் குழந்தைகள் உடன் தினமும் பேசுங்கள்… சிறிது நேரம் விளையாடவும் செய்யுங்கள். அவர்களுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்…ஷ்மார்ட் போனை அல்ல…!

You may have missed