அமெரிக்கர்களை திருமணம் செய்தால் குடியுரிமை.. ஜோ பைடனின் குடியுரிமை மசோதா வாபஸ்.. அதிர்ச்சியில் மக்கள்..!
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த நேரத்தில் குடியுரிமை இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அகதிகள் இங்கு உள்ள அமெரிக்கர்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என குடியுரிமை மசோதாவை அறிவித்திருந்தார். இவரின் இந்த திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் நீதிமன்றத்தில் இதற்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதா முழுவதுமாக ரத்து செய்ய போவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜோ பைடனின் குடியுரிமை மசோதா திட்டத்தின் படி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டது. அனால் தற்போது இந்த திட்டம் ரத்து செய்ய போவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை அறிவித்த உடன் முன்னாள் அதிபராக இருந்த ட்ரம்ப் அதிகளவில் இந்த மசோதாவை எதிர்த்தார். அனால் தற்போது அவர் வெற்றி பெற்ற நிலையில் இந்த திட்டம் வாபஸ் வாங்க படும் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அமெரிக்கா வாழ் குடிமக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது.