பிரதீப்பின் கூட்டணியில் டிராகன் படத்தில் கைகோர்க்கும் இரண்டு யுடியூப் பிரபலங்கள்..!

யுடியூப் மூலமாக சினிமாவில் கால் பதித்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி மற்றும் லவ் டு டே படங்களை இயக்கியுள்ரார். இதன் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் லவ் டு டே படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றார். மேலும் இவர் தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ட்ராகன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி இப்பொது மிகவும் விறுவிறுப்ப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் மிஸ்கின் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டாம் கட்ட நிலையை அடைந்துள்ளது எனவும் அதனுடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது எனவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் அனுபாமா மற்றும் கடாயு லோகேர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் யுடியூப் மூலமாக பிரபலமடைந்த விஜே சித்து விஜே ஹர்ஷத் கான் ஆகியோர் நடிப்ப்பதை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed