உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மூலிகை குடிநீர்… வீட்டிலேயே தயாரித்து ஆரோக்கியத்தைக் கூட்டலாம்..

மனித உடல் ஓட்டத்துக்கு தண்ணீர் தேவை. உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாவிட்டால் நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் வந்துவிடும். அதற்காக கண்ட தண்ணீரையும் குடிக்கக் கூடாது. நாம் குடிக்கும் தண்ணீரிலும் நம் ஆரோக்கியம் இருக்கிறது.

முந்தைய காலங்களில் எல்லாம் நம் முன்னோர்கள் மண்பானைத் தண்ணீரைத் தான் குடித்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் அதில் இருந்து நகர்ந்து வந்து விட்டோம். இன்று தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் குடிக்கிறோம். இதுபோக புதிது,புதிதாக மினரல் வாட்டர்கள் சந்தைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் விட வீட்டிலேயே அற்புதமான மூலிகைக் குடிநீரை நாமே தயாரித்து விட முடியும்.

மேட்டர் ரொம்ப சிம்பிள் தான்…

25 கிராம் மிளகு, 25 கிராம் சீரகம், ஒரு தேத்தாங்கொட்டை, கொஞ்சம் வெட்டிவேர், 20 கிராம் வெந்தயம் இவற்றை ஒரு தூய்மையான வெள்ளைத் துணியில் வைத்து அதை 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.

அதுவே மண் பானை எனில் இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால் கோடைக்கால நோய்த்தொற்றுகள் அண்டாது. நம் உடலுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

You may have missed