இந்த 6 ராசிக்காரங்களும் சாப்பாடுதான் முக்கியமுன்னு இருப்பாங்களாம்.. உங்க ராசியும் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு நம்மவர்களில் சிலர் பசி, தூக்கம், உணவு அனைத்தையும் மறந்துவிட்டு வேலை செய்வார்கள். ஆனால் சிலரோ சதா சர்வநேரமும் சாப்பாடுக்கு கூடுதல் கவனம் செலுத்துவார்கள். போன வேலையைக் கூட இரண்டாம் பட்சமாக வைத்துவிட்டு அந்த ஊரில் என்ன சாப்பிடலாம் என யோசிக்கும் ரகம் இவர்கள்!

சிம்மம்..

இவர்கள் எப்போதும் தரமான பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவை விரும்புவார்கள். சமைக்கத் தெரியாத இவர்கள் சுவைக்கத் தெரிந்தவர்கள். வீட்டு உணவை விரும்பி சாப்பிடுவார்கள். இவர்கள் நண்பர்களும் கூட சாப்பாட்டுப் பிரியர்களாகவே இருப்பார்கள்.

மேஷம்

இவர்கள் தங்கள் கோபத்தைகூட சாப்பிட்டுக் கொண்டுதான் காட்டுவார்கள். விரக்தியிலும் இவர்கள் சாப்பிடவே செய்வார்கள். உணர்ச்சியில் இருந்து தப்பிக்க இவர்கள் எடுக்கும் ஆயுதமே சாப்பாடுதான். வித்தியாசமான டிஸ், ஹோட்டல் குறித்து கேள்விப்பட்டால் உடனே புறப்பட்டுவிடுவார்கள்.

துலாம்

இவர்களுக்கு இரவில்தான் அதிகம் பசிக்கும். தூக்கத்தில் இருந்து விழித்தாலே சாப்பிட எண்ணக் கிடைக்கும் என தேடுவார்கள். சாப்பாடு என்பதை விட இனிப்பு, காரம் என்னும் நொறுக்குத்தீனிகளை அதிகம் விரும்புவார்கள். உணவு விசயத்தில் இவர்களுக்கு டாக்டரே சொன்னாலும் ஒழுங்கே இருக்காது.

தனுசு

சாப்பாடு என்பதைவிட திண்பண்டங்களை அதிகம் விரும்புவார்கள். இவர்களைப் பொறுத்தவரை சாப்பாடும் வாழ்வில் ஒருபகுதி. புதிய ஹோட்டல் குறித்து தெரிந்தால் உடனே போய்விடுவார்கள்.

மீனம்

இவர்கள் இஷ்ட உணவு என ஒரு பட்டியலே வைத்திருப்பார்கள். உணவுதான் வாழ்வை அடைவதற்கான லட்சியம் என்றெல்லாம் நினைப்பார்கள். பெரும்பாலும் சாலையோர உணவகங்களைப் பார்த்தால் உடனே புகுந்துவிடுவார்கள்.

ரிஷபம்

இவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். சக நண்பர்களே வெளியே போவமா சாப்பாடு வாங்கித்தாரேன் என சொன்னால்தான் வெளியே வருவார்கள். காரமான உணவு எனில் இவர்களுக்கு இஷ்டம். நாக்குக்கு இவர்கள் அடிமை..

உயிர் வாழ்வதற்கு சாப்பாடு தேவை. ஆனால் சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்தல் தேவையா? என நண்பர்களால் இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி கலாய்க்கவும் பட்டிருப்பார்கள்.