கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்… நெல்லிக்கனியின் அற்புத மருத்துவ தகவல்களை வழங்கியுள்ளோம்.. கட்டாயம் படியுங்கள்! பகிருங்கள்!
நெல்லிகனியை இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் நல்லபடியாக குணமாகும்.
உலர் நிலைக்கானியை சாப்பிட்டு வர கண்பார்வை அதிகமாகும். வயிற்றுப்போக்கு நிற்கும்.
நெல்லிக்கனியின் சாற்றினை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். குடல் புழுக்களை அழிக்கும்.
நெல்லிகனியை அரைத்து அதனுடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடித்து வர தீராத தலைவலி மற்றும் மூலநோய் நீங்கும்.
தினம் தோறும் ஒரு நெல்லிக்கனி தின்று வந்தால் இதயக் கோளாறுகள் நீங்கும்.
தினமும் நெல்லிக்கனியை சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.
சிறிதளவு நெல்லிச்சாற்றினை பாலில் கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.
நெல்லிகாயை உலர்த்தி பொடியாக்கி உடலில் தேய்த்துக் குளிக்க சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.
உலர்ந்த நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து, அந்த நீரை கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.
நெல்லியை நன்கு பொடிசெய்து அதனுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் நீங்கும்.
நெல்லியை நன்கு அரைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம் மற்றும் தலைவலி நீங்கும்.
நெல்லி சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் ஓரிரு நாளில் தீரும் .
நெல்லிப்பொடியைக பாலில் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி குடித்து வர கக்குவான் இருமல் குணமாகும்.
நெல்லிக்காயைத் தினம் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் குணமாகும். பற்களில் உள்ள கிருமிகள் அழியும்.
நெல்லிகாய் விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.
நெல்லியை லேகியம் ஆக்கி உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கும்.
நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து குடித்தால் பாம்பு, தேள், வண்டுகள் கடித்த நஞ்சுகள் இறங்கும்.
நெல்லிப்பொடி மற்றும் நெல்லி லேகியம், இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உடல் உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.
நெல்லி பூவை கைப்பிடி அளவு எடுத்து நன்கு மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியை உண்டாக்கும்.
நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை அடிக்கடி சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் காணப்படும்.
நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி போக்கும்.
நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறையில் சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.
நெல்லி மரத்தின் இலை கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து குடித்தால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.
நெல்லிவற்றலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க கண்கள் குளிர்ச்சி பெறும்.
நெல்லி வற்றலை ஒன்றிறண்டை இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து குடிக்க உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.
நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்ததால் வந்த வாந்தி நிற்கும்.
நெல்லிக்காயை துவையலாக செய்து சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவையை உண்டாக்கச் செய்யும்.
நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து…. சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.
நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்
என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம் என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும். உள்ளங்கை நெல்லிக்கனி என்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.எனவே நீங்கள் அடிக்கடி நெல்லிக்கனியை சாப்பிட மறக்காதீர்கள்.