வாவ்! கியூட்டாக நடந்த அக்கா மகன் பர்த்டே…. மனைவியுடன் கலந்து கொண்டார் நடிகர் அருண் விஜய்…!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்தவர் தான் நடிகர் விஜயகுமார். நாட்டாமை என்றாலே அது விஜயகுமார் தான். அவருடைய மகன் தான் நடிகர் அருண் விஜய். சினிமாவில் இவர் எளிதில் என்ட்ரி கொடுத்திருந்தாலும் இவருக்கு வெற்றி என்பது எட்டா கனியாகத்தான் இருந்தது. பல போராட்டத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் வில்லனாக நடித்திருப்பார். இது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. அவர் அந்த படத்தில் மாஸ்ஸாக நடித்திருப்பார். இந்த படம் தான் அவருக்கு சினிமாவுலகத்தில் பெரும் வரவேற்பு கிடைக்க முக்கிய படமாக அமைந்தது.

இந்த படத்தினை தொடர்ந்து அவரும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். மேலும் அவர் இப்போதெல்லாம் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தே நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த யானை மற்றும் மிஷன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது அவர் ரெட்டை தலை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது.

இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய அக்காவான அனிதாவின் மகன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன்னுடைய மனைவியுடன் கலந்து உள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்களை அவருடைய அக்கா அனிதா தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் அனைவரும் கூறிவருகின்றனர்.

You may have missed