ஹிந்தி பிக் பாஸ் சும்மா பின்னி பெடல் எடுக்குறாங்க ஸ்ருதிகா…கெத்தாக பேசிய ஸ்ருதிகா…குவியும் பாராட்டுக்கள்…

இந்திய சினிமாவில் முக்கியமான நிகழ்ச்சியில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ். இதெற்கென்று இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சின்னத்திரையின் முக்கியமான நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது ஹிந்தியில் 18 வது சீசன்னும் தமிழ் மற்றும் தெலுங்கில் 8 வது சீசன்னும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழில் சீசன் 7 வரை நடிகர் கமலஹாசன் நடத்தி வந்தார்.அவர் திடீரென விலகியதால் தற்போது சீசன் 8 விஜய் சேதுபதி நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஹிந்தியில் தொகுப்பாளராக நடிகர் சல்மான்கான் நடத்திவருகிறார். இதுவரை 17 சீசன் நடத்திய அவர் தற்போது 18 வது சீசனையும் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பாலிவூடில் இருந்த வரவேற்பு காரணமாகத்தான் மற்ற மொழிகளிலும் தொடங்கப்பட்டது. பிரபல நடிகையும் குத் விக் கோமாளி சீசன் வெற்றியாளருமான ஸ்ருதிகா ராஜ் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18ல் கலந்து கொண்டார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் தமிழ் பிக் பாஸ்ல் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவர். இந்த நிலையில் இவர் ஹிந்தியில் கலந்துள்ளாரே என ஆச்சரியமும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இருந்தாலும் ரசிகர்கள் பெருமை பட்டனர்.

மேலும் இவர் சீசன் 18 ல் கலந்து கொண்டு பாலிவூட் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் தற்போது இவரின் உண்மை குணங்களை தெரிந்து கொண்டு ரசிகர்களும் இவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்நிலையிலையில் தற்போது அவர் கெத்தாக துணிச்சலாக தன்னுடன் பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் சக வீரர்களில் ஒருவரை அதாவது ஸ்ருதிகாவின் முதுகுக்கு பின்னால் பேசிய ஒருவரை மிகவும் தைரியமாக நேரடியாக கை காட்டி பேசியுள்ளார். அவர் பேசிய அந்த காணொளி தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் ஸ்ருதிகாவின் ரசிகர்கள் ஸ்ருதிகாவின் துணிச்சலை பார்த்து சூப்பர் ஸ்ருதிகா என்று தங்களுடைய பாராட்டுகளை கூறி வருகின்றனர்.