5 மொழிகளில் உருவாக இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த மூவி… டைட்டிலுடன் வெளிவந்த போஸ்டர்…
விஜய் ஆண்டனி அவர்கள் தமிழ் சினிமாத்துறையில் இசையமைப்பாளராக இருந்து அதனைத்தொடர்ந்து நடிகராக உருமாறினவர்.அவர் செலெக்ட்டிவா நடிக்கும் அத்தனை படங்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இவரின் ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்து ஒளிந்திருக்கும்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் படத்திற்கான போஸ்டர் மற்றும் டைட்டில் தற்பொழுது வெளியாகி உள்ளது.அதில் படத்திற்கு “கனக மார்கன்”என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.
இதுவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் ஆகும்.