சீரியல் நடிப்பதை தவிர்த்ததற்கான காரணமே இவைதான்…! வெளிப்படையாக கூறிய மெட்டிஒலி சீரியல் நடிகர் விஷ்வா…!

மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடிப்பது சின்னத்திரையில் வரும் சீரியல்கள் தான். சின்னத்திரையில் வரும் சீரியல்கள் தான் மக்களுக்கு முழுநேர பொழுது போக்காக உள்ளது. அதுவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்கிற அளவிற்கு ஆகிறது. அதிலும் சில சீரியல்களில் வீட்டில் நடப்பதை அப்படியை திரையில் கட்டுவது போன்ற காட்சிகளும் வருகிறது. சீரியல் மட்டும் இல்ல சீரியலில் வரும் நடிகர்களும் இப்பொது மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளனர்.

அந்த வகையில் 90’s காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த மெட்டி ஒளி சீரியல். இந்த சீரியல் மற்றும் இந்த சீரியலில் நடித்த நடிகர்களையும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். மக்கள் மத்தியில் கொடி கெட்டி பரந்த சீரியல்களில் இதுவும் ஓன்று. கடந்த 2002 ம் ஆண்டு இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கினார். மேலும் இந்த சீரியல் அம்மா இல்லாத 5 பொண்ணுங்களின் கதையை மையமாக கொண்டது. மேலும் இந்த சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் விஸ்வநாதன்.

மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் திடீரென சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்தினார். அதனை பற்றி விஷவா ஒரு இன்டெர்வியூவில் கூறி உள்ளார். அதாவது மெட்டி ஒலி இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பாத்தாராம் மேலும் இரண்டாம் பாகம் வரவில்லை என்றாலும் மெட்டி ஒலி போன்ற சுவாரசியமான கதை உடைய நாடகத்தில் தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அவர் நினைத்தது போன்ற கதை அவருக்கு கிடைக்கவில்லையாம். மேலும் அவருக்கு தனிப்பட்ட வேலையும் இருந்ததாலும் அதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஆனதாலும் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகி விட்டேன் எனவும் கூறி உள்ளார். அவரது ரசிகர்கள் இன்றும் அவருடைய நடிப்பை பார்ப்பதற்கு ஆவலோடுதான் உள்ளார்கள்.

You may have missed