காதல் கணவருடன் தனித்தீவில் தேனிலவு … சும்மா மாஸ் பன்றாங்க வரலெக்ஷ்மி சரத்குமார் …!

80’s காலகட்டத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருகிறார் நடிகர் சரத்குமார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் ஒரு சில படங்கலிள் கதாநாயகனுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவருடைய மூத்த மகள் தான் வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி என்ற தமிழ் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். இந்த படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார்.

அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் தாரை தப்படை படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் மற்றும் வில்லியாகவும் நடித்துள்ளார். சர்க்கார் மற்றும் சண்டக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்த இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் வெகு நாட்களாக காதலித்து வந்த நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் தீவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது தன்னுடைய காதல் கணவருடன் தனி தீவில் தேனிலவு கொண்டாட சென்டற்றுள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார். அதற்க்கான போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.