அரவிந்த் சாமி போலவே அச்சு அசலாக இருக்கும் அவரின் அன்பு மகள்.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் 90’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. இவர் அன்றய காலகட்டத்து இளம்பெண்களுக்கு கனவு கண்ணன் என்றே சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி படத்தில் ரஜினிக்கு தம்பியாக அறிமுகம் ஆனார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தளபதி படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.காதல் படம் என்றாலே இவர் நடித்த ரோஜா படம் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

இவரின் நடிப்பு திறமையை முழுமையாக காட்டிருப்பார். அந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றி படம். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அரவிந்த் சாமிக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதன்பிறகு இவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மேலும் உடல் எடை கூடி இருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து விட்டார். மேலும் அவர் மீண்டும் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து தனி ஒருவன் படத்தில் நடித்தார். அது அவருக்கு மிக பெரிய வெற்றியினை கொடுத்தது.

மேலும் இதனை தொடர்ந்து சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகள் ஆதிராக்கு 28 வயதும் மகன் ருத்ராக்கு 24 வயதும் ஆகிறது. இவரது மகள் சமையல் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் இவரது மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அழகில் அப்பவே போல் மகளும் இருக்கிறார்.அச்சு அசலாக அப்படியே இருக்கிறார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.