கோழி இறைச்சி விரும்பி சாப்பிடுபவர்களா ..! எதற்கு வம்பு ..! இந்த பகுதியை மட்டும் சாப்பிடாதீர்கள் ..!

நாம் சாப்பிடும் உணவுகளில் பலருக்கும் பிடித்த உணவாக இருப்பது கோழி இறைச்சி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இது. கோழி இறைச்சியில் அதிகமான அளவுக்கு சுவை உள்ளது. அதே போல் அதிக அளவில் உடம்புக்கு கெடுதல் தரும் ஒரு பொருளாகவும் அது உள்ளது.

இறைச்சியில் புரத சத்து அதிகமாக இருப்பதால் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு கெடுதல் தரும். இறைச்சி மிகவும் சத்து உடையது தான் ஆனால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக கோழியின் தோல் பகுதியினை சாப்பிட கூடாதாம். இதில் அதிக அளவு கெட்ட கொழுப்பு மற்றும் கிளோரின் எச்சங்களை கொண்டு இருக்கிறதாம்.

அதன் தோல் பகுதி மிகவும் பயனற்றது. மேலும் கோழி புதிது போன்று இருக்கவே இந்த தோல் பகுதி பயன்படுகிறது. மேலும் இந்த தோல் பகுதியினை சாப்பிட்டால் உடம்பில் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கோழி இறைச்சி சாப்பிடும் பொழுது அதன் தோல் பகுதியினை தவிர்ப்பது மிகவும் நல்லது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.