3 படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது.. வருத்தத்தில் பேசிய ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான கமலகஹாசனின் மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தன்னுடைய தந்தையின் அடையாளத்தை வைத்து சினிமாவிற்கு வந்தவர். மேலும் இவர் ஹேரோம் என்னும் தன் தந்தையின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தான் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் இவர் நடிகையாக மட்டும் அல்லாமல் படகியாகவும் வலம் வந்தார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் நடித்த ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலமாக பிரபலம் ஆனார். மேலும் இவர் அதை தொடர்ந்து 3 என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் அந்த படத்தினை தொடர்ந்து  அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இருந்தபோதிலும் தமிழ் சினிமாவில் பெரிதளவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று அங்கயும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு 3 படத்தில் நடித்தது எனக்கும் மிகவும் ஒரு அனுபவமாக இருந்தது என்று கூறியிருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு இரண்டு வருடம் எனக்கு எந்த வித பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. யாரும் எனக்கு கதை சொல்ல முன் வரவில்லை. அப்போது நான் நினைத்தேன் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்தது நன்றாக நடிக்கவில்லையோ இல்லையென்றால் மக்களுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்தேன். பத்து வருடத்திற்கு பிறகு தான் ஜனனி கதாபாத்திரம் ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு பிடித்துள்ளது என்பதை உறுதி செய்தேன் என்றும் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காததை பற்றி வருத்தமாகவும் பேசியுள்ளார். இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed