6 வது முறையாக மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸை சேவை மனப்பான்மையில் அளித்த KPY பாலா.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் KPY பாலா . மேலும் இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் தொகுப்பாளராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திருக்கிறர். மேலும் தற்போது சினிமாவிலும் நடிகராக வலம் வருகிறார்.மேலும் இவர் சமூக ஆர்வலராகவும் தொண்டாற்றி வருகிறார். அவருக்கு பெரிய அளவில் வசதி இல்லை என்றாலும் தன்ககு கிடைக்கும் வருமானத்தில் பாதியை இல்லாத மக்களுக்கு உதவி செய்து சேவை ஆற்றி வருகிறார்.

இந்நிலையில் இவரின் உதவி செய்யும் குணத்தை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸ் இவரை பாராட்டியும் இவரையும் தன்னுடன் இணைத்து கொண்டு இருவருமாக சேர்ந்து இல்லாத மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர். பாலா மலை வாழ் மக்களுக்கு உடல் நலம் சரியில்லாத நேரங்களில் அவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று இதற்க்கு முன்னதாக 5 ஆம்புலன்ஸ்களை வழங்கி உள்ளார்.

இவ்வாறு சேவை மனபான்மையோடு சேவை செய்யும் பாலா தற்போது மலைவாழ் மக்களுக்கு 6 வது முறையாக இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளார். இதனை பெற்று கொண்ட மலைவாழ் மக்கள் வெகு விமர்சையாக பாலாவை பாராட்டி உள்ளனர். அவரின் ரசிகர்களுக்கும் அவருக்கு பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள்.

You may have missed