யாரை குறிப்பிட்டு பேசியுள்ளார் தெரியுமா..! மேடை போட்டால் அதை பார்க்க கூட்டம் கூட தான் செய்யும்.. சர்ச்சையாக பேசிய நடிகர் சித்தார்த்..!
தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தின் சிறு காதாபாத்திரம் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகர் சித்தார்த். அதை தொடர்ந்து கதாநாயகனாக பாய்ஸ் படத்தில் அறிமுகம் ஆனார். அவருக்கு முதல் படமே வெற்றி படமாக தான் அமைந்தது. அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ள்ளார். இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம். மேலும் இவர் எதை என்றாலும் பொது இடங்களில் வெளிப்படையாக பேசக்கூடியவர். அந்த வகையில் தற்போது இவர் பிரபல யூடுபேர் மதன் கௌரியுடன் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
அப்போது புஷ்பா 2 முதல் நாளில் நிகழ்ந்த தள்ளு முள்ளு குறித்து கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்க்கு சித்தார்த் இந்தியாவில் கூட்டம் கூடுவது எல்லாம் பெரிய விசியம் அல்ல எனவும் மேடை போட்டால் அதை பார்க்க கூட்டம் கூட தான் செய்யும் எனவும் பேசி இருந்தார். மேலும் ஒரு கட்டடத்தில் ஜேசிபி நின்றாள் கூட அதை பார்ப்பதற்கு கூட்டம் கூட தான் செய்யும் எனவும் பேசியிருந்தார். மேலும் எங்க காலத்தில் இதை பிரியாணி கோட்டர் என கலாய்த்ததுண்டு.
கரகோஷம் எல்லாம் ஒரு மேட்டர் அல்ல எனவும் மேலும் இந்தியாவில் இருக்கும் அரசியல் காட்சிகள் எல்லாம் பெரிய இடத்தில தான் இருக்குது எனவும் பேசியிருந்தார். புஷ்பா 2 பற்றி அவர் பேசி இருந்தாலும் தற்போது விஜய் ரசிகர்கள் விஜயின் வளர்ச்சி பார்த்து பொறாமையில் பேசுகிறார். என சித்தார்த் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை வைத்து வருகிறார்கள். மேலும் சித்தார்த்தின் இந்த சர்ச்சையான பேச்சு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.