தல தல தான்… தல அஜித் செல்பி வீடியோல சும்மா மாஸ் பன்றாரு பாருங்க…!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருப்பவர் தான் தல அஜித் குமார். தல படம் திரைக்கு வருவதை தல தீபாவளி தல பொங்கல் என ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள்.வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்து படத்தினை வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அஜித் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். குட் பேட் அக்லியில் அஜித்தின் புது கெட்டப் ஸ்டில்கள் சமீபத்தில் வெளிவந்து வைரல் ஆனது. மேலும் தனது காதல் மனைவியான ஷாலினி உடன் இவர் இருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது தல அஜித் கால் பந்து போட்டி ஒன்றினை பார்க்க சென்ற போது எடுத்து கொண்ட செல்பி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அது இப்பொது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவரது ரசிகர்கள் இந்த விடியோவை வைரல் ஆக்கி வருகின்றனர்.