வெள்ளம் சூழ்ந்த வீட்டை விட்டுவிட்டு வேறு இடம் நோக்கி சென்ற நடிகர் ஸ்ரீமான்…

தமிழ் சினிமாத்துறையில் குணநட்சத்திர நடிகர்கள் பல உள்ளனர்.அதில் ஒருவரான ஸ்ரீமான் அவர்கள் சில படங்களில் வில்லனாகவும் வந்துள்ளார்.எந்த வேடம் கொடுத்தாலும் அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றி கொள்ளும் சிறப்பு வாய்ந்தவர்.பஞ்சதந்திரம் படத்தில் காமடி ரோலில் பின்னி பிடலெடுத்திருப்பார்.

தற்போது சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.சில இடங்களில் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத நிலை நிலவி வருகிறது.அங்கே உள்ளவர்கள் ஆங்காங்கே இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து கோடபாம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலனியில் ஸ்ரீமான் அவர்கள் வசித்து வருகிறார்.இவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த நிலையில் இப்படியே போனால் வீட்டிற்குள் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுவிடும் என உணர்ந்த ஸ்ரீமான் அவர்கள் முன்னெச்சரிக்கையாக அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்தநிலையில் அவர் பேட்டியாளர்களிடம் கூறியதாவது வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்பதில் அரசின் பணி மிக சிறப்பாக உள்ளது.இன்னும் வேகமாக செய்தல் அடுத்த வருடத்திற்கும் உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.

You may have missed