அரசியலின் செல்லாக்காசு… சீமானை காரசாரமாக விமர்சித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவர்அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார்.மேலும் இவர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் எனவும் முடிவெடுத்து தன்னுடைய கட்சியினை ஆரம்பித்தார்.இந்நிலையில் இவரின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது. இவரின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ளவே ஏராளமான தொண்டர்கள் வந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தன்னுடைய கழகத்தின் கொள்கைகளை தொண்டர்கள் முன்பு கூறினார். மேலும் இவருடைய ஆவேசமான பேச்சு மற்றும் கருத்துக்கள் பலரையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு முடிந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் அரசியலுக்கு வரட்டும் என ஆதரவாக பேசியவர் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளை பார்த்த உடன் எங்களுடைய கொள்கைகள் வேறு அவருடைய கொள்கைகள் வேறு என பேசியுள்ளார்.மேலும் ஒரு பொது கூட்டத்தில் பேசிய அவர் விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினையும் கடுமையாக தாக்கி பேசி உள்ளர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் தவெகெ மற்றும் நாதக தொண்டர்களுக்கிடையே பலத்த வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி கமலுக்கு கொடுக்க கூடிய அடியில் இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வருவதற்கு பயப்பட வேண்டும் என சரமாரியாக விஜயை தாக்கி சென்னையில் ஒரு பொது கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும் இதனை பார்த்த தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் சீமானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாநிலம் முழுவதும் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் ஓட்டிவருகிறார்கள். மேலும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

You may have missed