அட இது நம்ம நடிகர் தனுஷா… அக்காவின் திருமணத்தின் போது அரும்பு மீசையுடன் எப்படி இருந்திருக்காரு பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் ஹிட் அடிக்க, ஓப்பனிங்கிலேயே ஹாட்ரிக் அடித்தார் தனுஷ். ஒருகட்டத்தில் தனுஷ் கால்ஷிட் வாங்கிவிட்டாலே வெற்றி நிச்சயம் என இண்டஸ்ட்ரியில் பேசும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

அதன் பின்பு இப்போது உச்சநடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களிலேயே ஹிட் அடித்த படமாக இவரது அசுரன் இருந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளை கட்டியிருக்கும் தனுஷ்க்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைப்பட இயக்குனராக இருக்கிறார். சகோதிரி கார்த்திகா, மருத்துவராக உள்ளார்.யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீபத்தில் தனுஷ்ம், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டனர்.

நடிகர் தனுஷின் அண்ணன் தான் இயக்குனர் செல்வராகவன் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு சகோதிரிகளும் உள்ளனர். இதில் காத்திகா என்னும் சகோதிரி மருத்துவராக உள்ளார். கார்த்திகா அண்மையில் தனது திருமண ஆல்பத்தில் இருந்து சில படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் தனுஷ் மிகவும் அப்பாவியான தோற்றத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதில் தனுஷ் குழந்தையைப் போல் முகபாவனையில் இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

pic1

pic2

You may have missed