நடிகர் காளிதாஸ் மனைவி தாரிணி காளிங்கராயர் யார் தெரியுமா.. வெளியான சுவாரசியமான தகவல்கள்..!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் காளிதாஸ். இவர்தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான நடிகர் ஜெயராம் மகன் ஆவார். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். மேலும் அவர் தமிழில் ராயன், பாவக்கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் காளிதாஸ் தாரணி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறியிருந்தார். அவர்களின் திருமணம் குருவாயூர் கோவில் வைத்து எளிய முறையில் இரு வீட்டாரின் முன்னிலையில் நடந்து முடிந்தது. முடிந்துள்ளது. இந்நிலையில் காளிதாஸ் மனைவி தாரிணி காளிங்கராயர் யார் என்று பலரும் தேடி வருகிறார்கள். தாரிணி பற்றிய சில தகவல்கள்.
தாரிணி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவரம். அனால் சிறு வயதில் இருந்து சென்னையில் செட்டில் ஆகி விட்டார்களாம். மேலும் இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது அதிக அளவில் ஆர்வம் உடையவரம். மேலும் இவர் 16 வயத்திலே மாடலிங் துறைக்கு வந்தவராம். ஒரு பேஷன் டிசைனரா மாடலிங்கில் பெயர் பெற்றவர். மேலும் இவர் 2019 ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் 2022 ம் ஆண்டில் மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டிகளிலும் கலந்து கொண்டவர்.
மேலும் இவர் விளம்பர படங்களில் நடிகை தீபிகா படுகோனுடன் சேர்ந்து நடித்துள்ளார்.மேலும் இவருடைய தாத்தா இந்திய விமான படையில் ராணுவ அதிகாரியாக இருந்து உள்ளார். அதன் பிறகு நாடாளுமன்றத்தில் முன்னாள் சபா உறுப்பினராக இருந்து உள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு கெட் டு கெதர் ஒன்றில் வைத்து தான் காளிதாஸை சந்தித்து இருவரும் காதலித்து உள்ளனர். இந்நிலையில் தற்போது இணையத்தில் தாரிணி பற்றிய தகவல்கள் வைரல் ஆகி வருகிறது.