அச்சு அசலாக கோட் சூட்டில் தந்தையை போல் இருக்கும் இளையதளபதி விஜய் மகன் சஞ்சய்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த கோட் படம் தற்போது வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தளபதி 69. மேலும் இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தான் சஞ்சய். இவர் தன்னுடைய தந்தையை போல நடிப்பில் ஆர்வம் காட்டாமல் தன்னுடைய தாத்தாவை போல் இயக்குனராக அறிமுகம் ஆகி உள்ளார். இவர் தற்போது ஒரு படத்தினை இயக்கி வருகிறார் அதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலயில் அந்த படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயின் யார் என்ற எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

மேலும் இவர் தன்னுடைய தந்தையை போல் கோட் ஷூட்டில் மாஸாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் தந்தையை போல் மகனும் கோட் ஷூட்டில் கலக்குகிறார் என பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். மேலும் விஜய் ரசிகர்கள் சஞ்சய் இயக்கம் படம் வெற்றி பெற வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
இளைய தளபதி..❤️????❤️????#ThalapathyVijay #IlayaThalapathy pic.twitter.com/d2wakC8j1D
— ???????????????????????????????????? ????ᴹᵃˢᵗᵉʳ (@vj_commander1) November 15, 2024