ஓய்வு பெறவில்லை.. கொஞ்சம் இளைப்பாற நினைக்கிறேன்.. ஓய்வு குறித்து விக்ராந்த் மாஸி விளக்கம்..!

12த் பெயில், செக்டர் 36, ஹசின் தில்ரூபா போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் தான் விக்ராந்த் மாஸி. இவர் தன்னுடைய திறமையால் நடிக்க வந்தவர். முதலில் இவரது பயணம் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக தான் ஆரம்பித்தது. மேலும் தமிழில் சிவகார்த்திகேயன் எப்படியோ அதே போன்று தான் பாலிவூட்டில் இவர் நடிக்க வந்தவர்.மேலும் இவர் சமீபத்தில் கடந்த 2022 ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து தி சபர்மதி ரிப்போர்ட் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் ராசி கன்னா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் பல அரசியல் விமர்சனங்களை பெற்று வந்தது . அனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் விக்ராந்த் சில நாட்களுக்கு முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் அதாவது கடந்த சில வருடங்கள் மிக சிறப்பாக இருந்தது. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. நான் ஒரு நல்ல கணவராகவும் தந்தையாகவும் என்னுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும். நான் தற்போது என்னுடய குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது. காலம் சரியாக இருந்தால் வரும் 2025ல் ஒருவரை ஒருவர் சந்திக்கலாம் என அறிவித்திருந்தார். இதனை பலரும் அவர் ஓய்வு எடுக்க போவதாக நினைத்துவிட்டனர்.

அதற்க்கு விளக்கம் அளித்து ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதாவது எனக்கு தெரிந்தது அனைத்தும் சினிமாதான். இந்த தொழில் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. உடல் நலமும், மன நலமும் சரியில்லாததால் கொஞ்சம் இளைப்பாற நினைக்கிறேன். எனக்கு அவகாசம் தேவை. சினிமாவில் இருந்து ஓய்வு பெறபோவதாக கூறவில்லை. நான் வெளியிட்ட அறிக்கையை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. சரியான நேரத்தில் மீண்டும் வருவேன் என்று ஓய்வு குறித்து விக்ராந்த் மாஸி அறிவித்திருந்தார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.